தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?.

18.04.2026 12:52:20

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறவிருக்கிறது. வழக்கமாக திமுக, அதிமுக இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி நிலவும் நிலையில் தற்போது புதிதாக விஜயும் களமிறங்கியிருக்கிறார்.

அடிப்படையில் அவர் ஒரு நடிகர் என்பதால் அவரின் தமிழக வெற்றிக்கழகம் அதிகமான வாக்குகளை வாங்கும் என கணிக்கப்படுகிறது. அதேநேரம் அதிமுக, திமுக அளவுக்கு அந்த கட்சி வாக்குகளை பெறுமா? என்கிற கேள்வியும் உள்ளது.  விஜய் செல்லும் இடமெங்கும் அவரை காண பல்லாயிரம் மக்கள் கூடுகிறார்கள்.. ஆனால் அவரை பார்க்க ஆசைப்படுபவர்கள் எல்லோரும் அவருக்கு ஓட்டு போட மாட்டார்கள் என அதிமுகவும், திமுகவும் தொடர்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில்தான் பிரபல வார இதழான விகடன் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியிருக்கிறது.. அதன்படி,  திமுக கூட்டணிக்கு 33 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணிக்கு 33 சதவீத மக்களும், விஜயின் தவெகவுக்கு 25 சதவீத மக்களும், நாம் தமிழர் கட்சிக்கு 3 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், திமுக 121 தொகுதிகளிலும், அதிமுக 83 தொகுதிகளிலும், தவெக மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெறும் என இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டிருக்கிறது
.மேலும், ‘தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு 44 சதவீதம் பேர் விஜய்க்கும் 28 சதவீதம் பேர் ஸ்டாலினுக்கும், 25 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், 3 சதவீதம் பேர் சீமானுக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். 33 சதவீதம் பேர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் அந்த கட்சியே ஆட்சியமைக்க அதிக வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.