மக்களுக்கு ரணில் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு !

22.05.2022 09:34:06

எரிபொருள் நெருக்கடியை விரைவில் தீர்க்க முடியும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள்களுடனான கப்பல்கள் சில நாட்டை அண்மித்துள்ளன. அத்துடன் மேலும் எரிபொருளை பெறுவதற்கான கொள்வனவு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெறும் அதிகளவான தொகை எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் பிரதமர் கூறினார். அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதும் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தொடர்பாக தெரிவிக்கையில், இன்று அல்லது நாளை எரிபொருள் பிரச்சினையை பெருமளவில் தீர்க்கக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.