சென்னை தனியார் மருத்துவமனைக்கு திடீரென சென்ற முதல்வர் விஜய்!
|
தமிழக முதல்வர் விஜய் நேற்று திடீரென சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். ஸ்கின் கேர் மருத்துவமனைக்கு சென்ற விஜய் சிறிது நேரத்தில் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். அங்கு முதல்வர் விஜய் வருகை தருவதை அறிந்ததும் ஏராளமானவர்கள் திரண்டனர். விஜய்யை பார்த்து உற்சாகத்துடன் கை அசைத்தனர். தமிழக முதல்வர் விஜய் திங்கட்கிழமை சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். |
|
விதி எண் 110 கீழ் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து, ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசம், மகளிர் வெற்றி பயண திட்டம் விரிவாக்கம் உள்ளிட்ட அறிவிப்புகளை விஜய் வெளியிட்டார். அவை நடவடிக்கைகளில் பங்கேற்ற விஜய், பிற்பகலுக்கு பின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கிளம்பி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். ஸ்கின் கேர் மருத்துவமனைக்கு சென்ற விஜய் சிறிது நேரத்தில் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாரா? அல்லது ஏதேனும் பரிசோதனை செய்து கொண்டாரா? அல்லது ஆய்வு பணிகளுக்கு சென்றாரா? என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக முதல்வர் விஜய் வருகை தருவதை அறிந்ததும் அங்கு ஏராளமானவர்கள் திரண்டனர். விஜய்யை பார்த்து உற்சாகத்துடன் கை அசைத்தனர். காரில் ஏறி கிளம்ப சென்ற முதல்வர் விஜய்யும், மக்கள் கூட்டத்தை பார்த்ததும் அருகில் சென்று கை கொடுத்துவிட்டு சென்றார். முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டை மருத்துவமனை பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. |