சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

13.03.2024 15:21:31

சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் புதிய பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக எயார் வைஸ் மார்ஷல் எச்.எம்.எஸ்.கே.பி கொடதெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அமைச்சரவையின் பரிந்துரையின் பிரகாரம் துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் புதிய பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய ஜயகாந்த அண்மையில் ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.