அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு.

27.12.2025 14:49:26

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக - பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது கட்சி 170 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும், மீதமுள்ள 64 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால், அதிமுக 150 இடங்களில் மட்டும் போட்டியிட்டு, மீதமுள்ள 84 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என பாஜக அழுத்தம் கொடுத்துள்ளது. இதில் பாஜகவுக்கு 40 தொகுதிகள், பாமகவுக்கு 15, தேமுதிகவுக்கு 10, அமமுகவுக்கு 8 என பிரித்து கொடுத்தால் மட்டுமே கூட்டணி வலுவாக அமையும் என்பது டெல்லியின் கணக்காக உள்ளது.

ஆனால் 35 தொகுதிகள் வரை பாஜகவுக்கு வழங்க அதிமுக சம்மதித்ததாக தெரிகிறது. மேலும் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர் தேர்வில் அதிமுகவின் விருப்பமும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு டெல்லி 'டபுள் ஓகே' சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.