உச்சத்தைத் தொட்ட மரக்கறிகளின் விலை; திண்டாடும் மக்கள்

05.01.2024 07:12:27

மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.


குறிப்பாக 1 Kg கரட் சுமார் 1000 ரூபாயையும், 1 Kg பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி 2000  ரூபாயையும் நெருங்குவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி பேலியகொட மெனிங் சந்தையில் 1 Kg கரட்- 750 க்கும், போஞ்சி -500 ரூபாய்க்கும், வெண்டைக்காய்- 250 ரூபாய்க்கும், மிளகாய் 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலைகாரணமாக பயிரிச்செய்கை பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளமையே  இதற்கு காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர்.

இதேவேளை மீன்களின் விலையும் விண்ணைமுட்டும் அளவுக்கு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.