
பெட்ரோலிய ஆய்வை தொடங்கவுள்ள அரசாங்கம்!
18.09.2025 15:32:43
விஞ்ஞானிகள் மற்றும் துறை நிபுணர்களின் உதவியுடன் அரசாங்கம் பெட்ரோலிய ஆய்வைத் தொடங்கும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். கொலன்னாவை பெற்றோலிய சேமிப்பு வளாகத்தில் ஆறு கூடுதல் எண்ணெய் சேமிப்பு தொட்டிகளின் கட்டுமானப் பணிகளை இன்று தொடங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். |
பெட்ரோலிய ஆய்வில் விஞ்ஞானிகளும் நிபுணர்களும் ஏற்கனவே தன்னார்வத் தொண்டு செய்துள்ளனர் என்று அவர் கூறினார். "எங்கள் மக்கள் பெரும்பாலும் தேர்தல் காலங்களில் மட்டுமே எண்ணெய் இருப்பு பற்றிய கதைகளைக் கேட்கிறார்கள். முதல் போத்தல் கச்சா எண்ணெய் 1970 தேர்தலின் போது காட்டப்பட்டது. தற்போது, நாங்கள் நிபுணர்களை நம்பி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கிறோம், அதே நேரத்தில் அரசாங்கம் தேவையான வசதிகளை மட்டுமே வழங்குகிறது," என்று அவர் கூறினார். |