Dude படம் உலகளவில் செய்துள்ள வசூல்!
27.10.2025 14:44:14
|
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக மாறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே, டிராகன் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து Dude படமும் ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. இந்த மூன்று திரைப்படங்களும் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் க்ளப்பில் இணைந்துள்ளது. இதன்மூலம் முதல் மூன்று படங்களில் ரூ. 100 கோடி வசூல் செய்த நாயகன் பிரதீப் ரங்கநாதன் மட்டும்தான் என்கிற சாதனையை படைத்துள்ளார். |
|
அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த Dude படம் சர்ச்சையில் சிக்கினாலும், முதல் நாளில் இருந்தே வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், 10 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக கடந்திருக்கும் Dude படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 107 கோடி வசூல் செய்துள்ளது. |