
புதிய இசை நிறுவனத்தைத் தொடங்கிய ஐசரி கணேஷ்.
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ளது வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம். பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்திவந்த ஐசரி கணேஷ் தமிழ் சினிமாவில் கால்பதித்து இதுவரை பல வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ளார்.
இதையடுத்து சமீபத்தில் இந்த நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அது முதற்கொண்டு அதிகளவில் படங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை வைத்து படங்களைத் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில் வேல்ஸ் நிறுவனம் தற்போது ‘வேல்ஸ் ம்யூசிக் இண்டர்நேஷனல்ஸ்’ என்ற நிறுவனத்தையும் தொடங்கியுள்ளது. அதன் தொடக்கவிழா சென்னையில் நடந்த நிலையில் தமிழ் சினிமாவின் முக்கியப் பிரமுகர்கள் வருகைதந்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.