ஐஎஸ் அமைப்பை எதிர்த்துப் போராடுவோம்: தாலிபான்
தாலிபான்கள் முன்னதாக ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து ஆட்சி செய்து வருகின்றனர். இதனையடுத்து மாநில கவர்னர்களை தலிபான் தலைமை நியமித்து வருகிறது. ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் முல்லா கெடா முகமது முகமது கவர்னராக பதவி ஏற்றுள்ளார். இந்த மாகாணத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
முகமது ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை தீவிரமாக எதிர்த்து வருகிறார்.உலகத்தையே அச்சுறுத்திவரும் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதிகள், பொது இடங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி காபூல் விமான நிலையம் அருகே நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் நூறு ஆப்கன் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியாகியது ஜோ பைடன் அரசை கொந்தளிக்கச் செய்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த முகமது, சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் ஐஎஸ் மேற்கொண்ட தாக்குதலை ஒப்பிடுகையில் ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் பெரும் அச்சுறுத்தலாக இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளதால் ஐஎஸ் அமைப்பால் ஆப்கானிஸ்தானுக்கு பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.