
சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன தெரிவு!
18.12.2024 08:18:43
பொலன்னறுவை மாவட்ட எம்.பி ஜகத் விக்கிரமரத்ன புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரின் பெயரை பிரதமர் ஹரிணி முன்மொழிய சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார். 10வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக ரங்வல ராஜினாமா செய்ததையடுத்து, சபாநாயகர் பதவி வெற்றிடமாகி இருந்தது.