கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

13.09.2021 07:14:21

ஸ்ரீமுஷ்ணத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.கடலூர் மாவட்டம் முழுவதும் நடக்கும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் துவக்க விழா ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்தது.கலெக்டர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார்.

சப் கலெக்டர் மதுபாலன் முன்னிலை வகித்தார்.சுகாதாரதுறை துணை இயக்குனர் மீரா வரவேற்றார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பங்கேற்று முகாமை துவக்கி வைத்து பேசுகையில், ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி பகுதியில் மீதமுள்ள 1527 நபர்களுக்கு தடுப்பூசி போட்டுவிட்டால் 100 சதவீதம் தடுப்பூசி போட்ட பேரூராட்சியாக மாறிவிடும். இன்று மாவட்டம் முழுவதும் 909 மையங்களில் நடக்கும் சிறப்பு முகாம்களில் 1.70 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற பகுதிகளில் பொதுமக்களோடு சேர்ந்து கட்சியினர் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும், என்றார்.சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., தாசில்தார் முகமது அசேன், பி.டி.ஓ.,க்கள் விஜயா, பாலகிருஷ்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஸ்வரன், வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன், ஒன்றிய கல்விக்குழு தலைவர் தங்க ஆனந்தன், கல்விக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன், கண்ணப்பன், செல்வகுமார், வீரவேல், சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.