தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மிக பலத்த மழை
26.11.2021 08:14:03
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.