மலையக மக்களுக்கு இந்தியா கௌரவம்!

27.12.2023 15:59:13

மலையக மக்களைக் கௌரவிக்கும் வகையில் இந்திய தபால்துறை அமைச்சினூடாக முத்திரையொன்று வெளியிடப்பட்டுள்ளது.  
 

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆலோசனையின் பேரிலும் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை அவர்களின் ஏற்பாட்டிலும் குறித்த முத்திரையானது வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இம்மாதம் 30ஆம் திகதி புதுடில்லியில், நடத்தப்படவுள்ள நிகழ்வின்போது, பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நடா அவர்களால், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானிடம் முதல் முத்திரை கையளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.