இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள்: ஆவணப்படுத்தினார் ஐ.நா பொதுச்செயலாளர்

01.10.2021 12:15:39

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆவணப்படுத்தியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக 45 நாடுகளில் வசிக்கும் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என 240 பேர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களையே ஐ.நா. பொதுச் செயலாளர் ஆவணப்படுத்தியுள்ளார்.

பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆவணப்படுத்தப்பட்ட அறிக்கையை மனித உரிமைகளுக்கான ஐ.நா. உதவிச் செயலாளர் பிராண்ட்ஸ் கெஹ்ரிஸ், ஐ.நா. மனித உரிமைகள் சபைக்குச் சமர்ப்பித்துள்ளார்.

இதில் பழிவாங்கல் தொடர்பான குற்றச்சாட்டுக்களே அதிகமாக உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.