ஈழப்பற்றாளர் புலவர் புலமைப்பித்தன் இயற்கை எய்தினார்
08.09.2021 07:24:12
சமூக அக்கறை கொண்ட திரையிசைப் பாடல்களை எழுதியவரும் தமிழீழ விடுதலையில் பேரார்வம் கொண்டவரும் . தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களிடத்தில் பற்றும் பாசமும் கொண்டு அவரை தன் இல்லத்தில் தங்க வைத்து உபசரித்து அழகுபார்த்தவருமான புலவர் புலமைப்பித்தன் இன்று காலமானார்.
சட்ட மேலவை உறுப்பினராகவும், அரசவைக் கவிஞராகவும் தடம் பதித்து ,கழக அவைத்தலைவர்,
கழக இலக்கிய அணி செயலாளர் என கழகத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.கவிஞர் புலமைப்பித்தன்
1935ஆண்டு பிறந்தார் 2021 இன்று அவர்கள் காலமான செய்தி துயருறச் செய்கிறது. இறவாப் புகழ்கொண்ட பாடல்களைத் தந்தவர்.