சவுதியின் மக்காவிலும் ஒலிக்கவுள்ள தமிழ்

06.07.2022 09:26:06

இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான சவுதி அரேபியாவிலுள்ள மக்காவில் தமிழ் மொழியும் ஒலிக்கவுள்ளதாக தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட இஸ்லாமிய மக்களுக்கு மிகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி அரஃபா நாள் சொற்பொழிவு இனிமேல் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு நேரலையாக ஒலிபரப்பப்படும் என சவுதி அரசு அறிவித்துள்ளது.

மக்காவின் அரஃபா நாள் சொற்பொழிவுகள் தமிழ் உட்பட 15 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்படும் என இஸ்லாமியத் தலைவர் அல் சுதைஸ் தெரிவித்துள்ளதாக அரபு நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.