பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: நடால்- ரடுகானு இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம் !

24.05.2022 09:35:29

 

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில், ரபேல் நடால் மற்றும் எம்மா ரடுகானு ஆகியோர் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர்.

 

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், அவுஸ்ரேலியாவின் ஜோர்தான் தொம்சனை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ரபேல் நடால், 6-2, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.


பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், பிரித்தானியாவின் எம்மா ரடுகானு, செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், எம்மா ரடுகானு, 6(4)-7(7), 7-5, 6-1 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.