இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் இன்னொரு திரைப்படம்
25.06.2024 07:03:00
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கும் புதிய படத்திற்கு ‘பாட்டல் ராதா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் பா ரஞ்சித்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ள இப்படத்தில் குருசோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் , ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மது பாட்டிலுக்குள் உள்ள சிம்மாசனத்தில் குரு சோமசுந்தரம் உட்கார்ந்து இருப்பது போன்றும் அவரது கையில் சரக்கு இருப்பது போன்றும் உள்ளது.