சுந்தர் சி அடுத்ததாக இயக்கப்போகும் படம்!

01.12.2025 14:14:52

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுந்தர் சி தற்போது நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரஜினி - கமல் இணையும் படத்தை சுந்தர் சி இயக்க வாய்ப்பு கிடைத்து, அதற்கான அறிவிப்பையும் ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டது. ஆனால், அந்த அறிவிப்பு வெளிவந்த சில நாட்களிலேயே இப்படத்திலிருந்து தான் வெளியேறுவதாக சுந்தர் சி அறிவித்தார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது சுந்தர் சி-க்கு பதிலாக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்கின்றனர்.

இந்த நிலையில், சுந்தர் சி இயக்கப்போகும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுந்தர் சி அடுத்ததாக விஷாலை வைத்து புதிய படம் இயக்கவுள்ளார்.

கமர்ஷியல் ஆக்ஷன் என்டர்டைன்மெண்ட் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்கிறாராம். மேலும் ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம்.