இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட இளம்பெண்!

02.08.2024 15:39:18

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கவனம் ஈர்த்துவருகிறார், இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட இளம்பெண் ஒருவர். 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில், நேற்று வரலாறு படைத்துள்ளது மலேசிய பெண்கள் இரட்டையர் அணி. ஒலிம்பிக்கில், பெண்கள் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் மலேசிய அணி இதுதான். தீனா முரளிதரன் (Thinaah Muralitharan) மற்றும் பியர்லி டேன் (Pearly Tan) என்னும் இருவரைக் கொண்ட அணிதான் அது.

  

இதில், தீனா இலங்கைத் தமிழ் பின்னணி கொண்டவர் ஆவார். அவரது தந்தை S. முரளிதரன் ஒரு பொறியாளர். தாய் பரிமளா தேவி கலாலிங்கம்.

தமிழ், மலாய், ஆங்கிலம் மற்றும் மாண்டரின் ஆகிய நான்கு மொழிகள் பேசும் தீனா, 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில், பெண்கள் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி உலகின் கவனம் ஈர்த்துள்ளார்.

மலேசியாவில் பிறந்த தீனா, அந்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். தீனா, பியர்லி இணை, ஒலிம்பிக்கில் கலந்துகொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.