இலங்கை குறித்து வெளியிட்ட ‘உலக உணவுத் திட்டம்‘

19.07.2024 09:05:38

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை படிப்படியாக மீண்டுவருகின்ற போதிலும், நாடளாவிய ரீதியில் 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதார மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு பல்வேறுபட்ட மாற்று வழிமுறைகளைக் கையாண்டு வரும் நிலை தொடர்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

 

அத்துடன்  இலங்கை அண்மைக்காலமாக  காலநிலைமாற்ற சவால்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், அதிகரித்த வெப்பநிலை மற்றும் உயர்வான வெப்பம் என்பன மக்களின் ஆரோக்கியத்திலும், விவசாய நடவடிக்கைகளிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.