ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணம்

15.04.2022 14:05:53

 

'பாலிவுட்' நடிகர்கள் ரன்பீர் கபூர் - ஆலியா பட் இருவரும், மும்பையில் உள்ள வீட்டில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

'பாலிவுட்' நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராயிருந்து மறைந்த ராஜ் கபூரின் பேரனும், மறைந்த நடிகர் ரிஷி கபூரின் மகனுமான ரன்பீர் கபூர், 39, இயக்குனர் மகேஷ் பட் மகள் ஆலியா பட், 29, இருவரும் 2018ல் இருந்து காதலித்து வந்தனர். இவர்கள் 2019ல் திருமணம் செய்து கொள்வர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் திருமணம் தள்ளிப்போனது.