அதிமுக ஆதரவாக பரப்புரை பணிகளில் ஈடுபட்டிருந்த போது நடிகர் கார்த்திக்கிற்கு மூச்சுத்திணறல்...

21.03.2021 08:00:00

அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது நடிகர் கார்த்திக்கிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரும், நடிகருமான கார்த்திக் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

நடிகர் கார்த்திக் நடிப்பில் தற்போது தீ இவன் என்ற படம் உருவாகி உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் இப்படத்தில் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ளார். டி.எம் ஜெயமுருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுதவிர தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் அந்தகன் படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.