வாஞ்சையோடு அணைத்துக்கொள்ளும் உறவுகள்.
அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக முதல்வர் மு.க ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இப்பயணத்தின் போது, சான்பிரான்சிஸ்கோவில் கடந்த 29ம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து ஓமியம் நிறுவனத்துடன் ரூ.400 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.