பயங்கரவாதிகள் தாக்குதல் நைஜரில் 69 பேர் பலி
06.11.2021 10:28:35
நைஜரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டனர்.மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில் பயங்கரவாத தாக்குதல்தொடர்கதையாக உள்ளது. இதை முறியடிக்க பாதுகாப்பு படையினருக்கு உதவும் வகையில் உள்ளூர் பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த பயங்கரவாதிகள் இக்குழுவினர் மீது திடீர் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இதன்படி மேற்கு நைஜரில் பானிபாங்கோ பகுதியில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தோர் மீது சமீபத்தில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் நகரின் மேயர் உட்பட 69 பேர் கொல்லப்பட்டதாக நைஜர் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் அறிவித்து உள்ளது.