தூத்துக்குடி துப்பாக்கி சூடு 32-ம் கட்ட விசாரணை இன்று!

16.11.2021 08:14:42

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 32-ம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது. இன்று தொடங்கிய விசாரணை நவம்பர் 25-ம் திகதி வரை 10 நாட்கள் நடைபெறஉள்ளது. ஒரு மருத்துவர் உட்பட துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் என 41 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை நடந்து முடிந்த 31 கட்ட விசரணையில் 1,360 பேருக்கு சம்மன் அனுப்பி 979 பேர் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.