தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி

08.08.2021 05:05:01

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளத்துடன் இனி இணைந்து செயல்பட போவதில்லை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலும் படப்பிடிப்பு நடத்துவோம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகம் சுமூகமாகவும் பொருளாதார இழப்பை தவிர்க்கும் வகையில் இயங்குவதற்க்காக தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு முழு ஒத்துழைப்பு தருவதை திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களின் தலைமையிலான நிர்வாகிகள் ஒப்புகொண்டார்கள்.

ஆனால் அடுத்த நாளே தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சம்மேளன தலைவர் திரு. ஆர்.கே.செல்வமணி அவர்கள் தயாரிப்பாளர்களின் நலன்களை சீர்குலைக்கும் வகையில் தன்னிச்சையாக செயல்படுவது கண்டனத்திற்குரியது.

ஆகவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலன் கருதியும் தமிழ் திரையுலத்தை காப்பாற்றும் வகையிலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அவசர செயற்குழு கூட்டம் 6-ம் தேதி நடைபெற்று கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.