மகன் இறந்த இரண்டே வாரத்தில் நடிகை கவிதாவின் கணவரும் கொரோனாவுக்கு பலி

30.06.2021 10:23:19

கொரோனாவால் ஒரே மாதத்தில் மகனையும், கணவரையும் பறிகொடுத்த நடிகை கவிதாவுக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

தமிழில் ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், பாண்டவர் பூமி, அவள் வருவாளா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கவிதா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

நடிகை கவிதாவின் மகன் சாய் ரூப், கணவர் தசரதராஜ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 16-ம் தேதி கவிதாவின் மகன் சாய் ரூப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.