
ஏர் இந்திய விமானத்தின் கருப்பு பெட்டி சேதம்!
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் ‘கருப்புப் பெட்டி’ சேதடைந்துள்ளது.
இதனால், அதில் பதிவான தரவுகளை பிரித்தெடுக்கும் செயல்முறைக்காக கருப்புப் பெட்டியை அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டியிருக்கும்.
எனினும், இது தொடர்பான இறுதி முடிவினை அரசாங்கம் எடுக்கும் என்று இந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருப்புப் பெட்டி அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டால், அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய இந்திய அதிகாரிகள் குழுவும் இந்த பயணத்தில் பங்கெடுக்கும்.
அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI171 புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
அந்த விமானம் மதியம் 1:40 மணிக்கு மேகனி நகர் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் வீழ்ந்து பெரும் தீ விபத்துக்கு உள்ளாகியது.
விமானத்தில் இருந்த 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.
விபத்து நடந்த 28 மணி நேரத்திற்குப் பின்னர், ஏர் இந்தியா விமானத்தின் ‘கருப்புப் பெட்டி’ மீட்கப்பட்டது.