கொங்ஹொங்கின் ஒருபகுதி முழுமையாக முடக்கம்!
27.01.2021 09:13:53
பரிசோதனைகளை நடத்துவதற்காக கொங்ஹொங்கின் யாவ் மா டேய் என்ற பகுதி நேற்று முதல் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அத்தோடு குறித்த பகுதியில் உள்ள சில கட்டடங்களில் வசிப்போர், கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்படும் வரை வீட்டிலேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் முடக்கநிலை செயல்படுத்தப்பட்ட யாவ் சிம் மொங் வட்டாரத்தின் ஒரு பகுதியே யாவ் மா டேய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாவட்டத்தில் ஒரு வாரத்திற்குள் இதுபோன்ற முடக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.