அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மு.க ஸ்டாலின்
04.09.2024 08:01:13
அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் வகையிலும் , தொழில் முதலீடுகளை மேம்படுத்தும் விதமாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் 1,300 கோடி ரூபாய் முதலீட்டில் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.