
14ஆம் திகதி சீனா செல்கிறார் ஜனாதிபதி!
08.01.2025 09:11:39
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 2025 ஜனவரி 14 முதல் 17 வரை சீனாவுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். |
அமைச்சரவை அமர்வின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஜனாதிபதியின் சீன விஜயம் தொடர்பான விபரங்களை தெரிவித்தார். ஜனாதிபதியுடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் சீனா செல்லவுள்ளனர். |