உத்தரகாண்ட்டில் பதற்றம்: 4 பேர் உயிரிழப்பு
09.02.2024 12:44:30
உத்தரகாண்ட் மாநிலம், ஹர்த்வானியில் உள்ள வான்புல்புரா பகுதியில், இடம்பெற்ற வன்முறை சம்பவத்தினால் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில்,சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட பள்ளிவாசல் மற்றும் மதரஸா என்பவற்றை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நகராட்சி அதிகாரிகள் இடிக்க முற்பட்ட போதே அங்கு கலவரம் வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கலவரத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்ட பொலிஸார் படுகாயமடைந்துள்ளதுடன், 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் கலகக்காரர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பகுதியில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.