டெல்லி- குஜராத் அணிகள் மோதல்!

04.04.2023 21:13:12

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 7ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

டெல்லி மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் டெல்லி அணியின் தலைவராக டேவிட் வோர்னரும் குஜராத் அணியின் தலைவராக ஹர்திக் பாண்ட்யாவும் தலைமை தாங்கவுள்ளனர்.

இரு அணிகளும் இதுவரை ஒரு முறை மோதியுள்ளன. இதில் குஜராத் அணி வெற்றிபெற்றுள்ளது.