இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ தீர்மானம்
நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை திறப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை திறப்பது தொடர்பான விடயங்களை கலந்துரையாட அமைச்சின் வெளிநாட்டு ஆதன முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரதீபாஷாரம் தலைமையிலான உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழுவினர் 22 ஆம் திகதி நியூசிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இந்த குழு 25 ஆம் திகதி வரை நியூசிலாந்தில் தங்கியிருந்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளும்.
இந்த விஜயத்தின் போது, தூதுக்குழுவினர் நியூசிலாந்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுப்படுவார்கள்.
நியூசிலாந்தில் தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்களவு இலங்கையர் சமூகம் உள்ளது.
இராஜதந்திர தூதுக் குழுவொன்றை நியூசிலாந்தில் நிறுவுவதன் மூலம், வர்த்தகம், கல்வி, விளையாட்டு, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் வலுவான ஒத்துழைப்பைப் பின்தொடர்வதற்கும், சமூகத்தை அணுகுவதற்கும் உதவும்.
2021 ஆம் ஆண்டு இலங்கையில் நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் திறக்கப்பட்டது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கி