'அச்சம் என்பது இல்லையே'
இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே'. இந்த படத்தில் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கிறார்.
அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
அச்சம் என்பது இல்லையே இப்படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எமி ஜாக்சன் மற்றும் இயக்குனர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் கவனம் பெற்று வருகிறது.