மொங்கோலியாவில் மிக கடுமையான குளிர்காலம்

22.03.2024 07:19:50

மொங்கோலியா அரைநூற்றாண்டு  காலத்தில் சந்தித்துள்ள மிகவும் கடுமையான குளிர்காலம் காரணமாக ஐந்து மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளன என  மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மொங்கோலியா மிகவும் கடுமையான குளிரில் சிக்குப்பட்டு உறைந்துபோயுள்ளது 4.7 மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளன ஆயிரக்கணக்கான் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உணவு விநியோகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனம் தெரிவித்துள்ளது.

 

வெப்பநிலை வீழ்ச்சியடைந்துள்ளது கடும் பனி காணப்படுகின்றது மேய்ச்சல் நிலங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளன கால்நிலைகள் உணவிற்காக அலைகின்றன என செஞ்சிலுவை சம்மேளனம்  தெரிவித்துள்ளது.

மங்கோலியாவில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நாடோடிகள் மற்றும் கால்நடை மேய்ப்பில் ஈடுபட்டுள்ளனர் உணவுக்காகவும் சந்தைகளி;ல் விற்பனை செய்வதற்காகவும்  அவர்கள் கால்நடைகளை நம்பியுள்ளனர்.

 

தங்கள் வாழ்க்கைக்காக கால்நடைகளை முற்றாக நம்பியுள்ள மக்கள் கடும் குளிர்காலம் காரணமாக ஒரு சிலமாதங்களில் ஆதரவற்றவர்களாக மாறிவிட்டனர் சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனத்தின் ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய இயக்குநர்  அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.அவர்களில் சிலர் தங்களிற்கான உணவைபெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தங்கள் வீடுகளில் குளிரை போக்குவதற்காக எரியூட்ட முடியாத நிலையில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கால்நடைமேய்ச்சலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களில் 2250க்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் கால்நடைகளில் 70 வீதத்திற்கும் அதிகமானவற்றை இழந்துவிட்டன 7000ம் குடும்பங்கள் போதிய உணவை பெற முடியாத நிலையில் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடும் குளிரான காலநிலை மொங்கோலியாவின் பெரும்பகுதியை பாதித்துள்ளது.இந்த காலநிலை நீடிக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.

 

தற்போது மொங்கோலியாவில் வசந்தகாலம் ஆனால் குளிர்காலம் நீடிக்கின்றது இன்னமும் நிலத்தில் பனி காணப்படுகின்றது கால்நடைகள் உயிரிழக்கின்றன எனமத்தியு தெரிவித்துள்ளார்.