‘மகாமுனி’ 3 சர்வதேச விருது !

30.07.2021 12:07:23

சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘மகாமுனி’ திரைப்படம் ஏற்கனவே 11 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார். 2011-ம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடித்த ‘மகாமுனி’ படத்தை இயக்கினார் சாந்தகுமார். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.

இப்படம் ஏற்கனவே 11 சர்வதேச விருதுகளை வென்றுள்ள நிலையில், தற்போது இஸ்ரேல் மற்றும் பூட்டான் நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு மேலும் 3 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.