
விருதை வென்ற ‘டெய்லி மிரர்’.
‘லண்டன் வணிக ஆலோசனை நிறுவனம்’ ஏற்பாடு செய்த உலக வணிக சிறப்பு விருது விழாவில் எமது சகோதர பத்திரிகைகளான ‘டெய்லி மிரர்’ (Daily Mirror) ‘இலங்கையின் மிக பிரபலமான ஆங்கில பத்திரிகைக்கான’ விருது , ‘டெய்லி எஃப்டி’ (Daily FT )பத்திரிகை ‘இலங்கையில் மிக பிரபலமான வணிக பத்திரிகை’ மற்றும் 'லங்காதீப' இலங்கையின் மிக பிரபலமான பத்திரிகைக்கான விருதையும் வென்றது.
இந்த விருது விழா முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு, பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றது.
சிரேஷ்ட கட்டுரையாளர் மற்றும் பத்திரிகையாளருமான மோகன்ராஜ் மடவல, ‘டெய்லி மிரர்’ பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஜமீலா ஹுசைன் மற்றும் ‘டெய்லி எஃப்டி’ பத்திரிகையின் துணை ஆசிரியர் சாருமினி டி சில்வா ஆகியோருக்கு குறித்த விருதுகளை வழங்கினார்.
விஜய பத்திரிகை நிறுவனத்தின் விளம்பர பிரிவு தலைவர் இந்திக ஜயமஹா மற்றும் இங்கிலாந்தில் உள்ள எல்பிசி குழு நிறுவனங்கள் மற்றும் கேடக் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மரி வதீர் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.