ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் அனுமதி.

23.08.2025 11:26:04

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டார்.

இன்று அதிகாலை 12:22 மணிக்கு அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.