வெளிநாடு செல்லும் வலிமை படக்குழு

19.01.2021 09:17:39

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாடு செல்ல உள்ளதாம்.

அஜித்குமாரின் வலிமை படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹூமா குரேசி அஜித்துக்கு ஜோடியாக நடிக்க, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது புனேவில் பைக் ரேஸ் காட்சியை படமாக்கி வருகின்றனர். இதையடுத்து முக்கிய சண்டைக் காட்சியை படமாக்க வலிமை படக்குழு அடுத்ததாக தென் ஆப்ரிக்காவிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் வலிமை படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை அஜித்தின் பிறந்தநாளை ஒட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.