"நடிகர் ரகுவரனின் மரணத்திற்கு இதுதான் காரணம்".

24.06.2025 00:18:14

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன்கள் என பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ரகுவரனின் பெயர் இருக்கும். பாட்ஷா, அருணாச்சலம் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த ரகுவரன், கடைசியாக தனுஷின் யாரடி நீ மோஹினி திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருடைய மரணம் திரையுலகில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரகுவரன் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் பப்லுவிடம் கேள்வி கேட்கப்பட்டது. காரணம் ரகுவரனும், பப்லுவும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.

ரகுவரன் குறித்து பேசிய பப்லு, "ரகுவரன் எனக்கு பிலிம் இன்ஸ்ட்யூட்டில் சீனியர். அங்குதான் எங்களுடைய நட்பு துவங்கியது. நாங்கள் இரண்டு பெரும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருப்போம். அவர் என்னைவிட உயரமாக இருப்பார். ஆனால், கலர், ஸ்டைல் எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கும். என்னுடைய Girl Friend மற்றும் அவருடைய Girl Friend இருவரும் நெருங்கிய தோழிகள். அதோடு எங்களுடைய Girl Friends இருவரும் பெரிய பணக்காரர்கள். நாங்கள் ரெண்டு பெரும் பயங்கர ஜீரோ பேலன்ஸ் ஆளுங்க".

பின் ரகுவரன் மறைவு குறித்து பேசிய நடிகர் பப்லு, "ரகுவரன் போதை பொருளுக்கு அடிமையாகி மூளையில் இருக்கும் நினைவு பகுதி செயலிழந்துதான் அவர் மறைவுக்கு காரணம். அவரை திருத்துவதற்கு நான் முயற்சி செய்தபோது, 'உன்னுடைய வேலை எதுவோ, அதை மட்டும் பார்' என சொல்லிவிட்டார்" என பப்லு கூறியுள்ளார்.