வேலணையில் தேசத்தின்குரல் நினைவேந்தல்!

14.12.2025 15:00:00

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வேலணை - வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் இன்று இடம்பெற்றது. இன்று காலை தீவக நினைவேந்தல் குழு இதற்காக ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தது.

முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமான குறித்த நினைவுகூரல் நிகழ்வில் தேசத்தின் குரலின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து ஈகச் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது.

இதன்போது ஏற்பாட்டுக் குழுவினருடன், ஊர்காவற்றுறை பிரதேச சபையின் உபதவிசாளர் மற்றும் பொதுமக்களும் இணைந்து, ஈழ விடுதலை போராட்டத்தின் அரசியல் இராஜதந்திரம் மிக்கவராக வலம் வந்த அன்ரன் பாலசிங்கம் நினைவுகளை மீட்டி அஞ்சலித்தமை குறிப்பிடத்தக்கது.