காதலனை கரம் பிடித்தார் பூஜா

04.02.2024 13:31:12

சித்திரை செவ்வானம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை பூஜா கண்ணனுக்கும் வினித்துக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

சமுத்திர கனிக்கு மகளாக சித்திரை செவ்வானம் திரைப்படத்தில் அறிமுகமான பூஜா அந்த படத்தை தவிர வேறு படங்களில் நடிக்காமல் சினிமாவில் இருந்து விலகி விட்டார்.

சென்ற வாரம் தனது காதலனை சோஷியல் மீடியாவில் அறிமுகப்படுத்தியிருந்தார் பூஜா. இந்நிலையில் , நேற்றைய தினம் பூஜா வினித் ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.