எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் !

24.05.2022 09:16:33

எரிபொருளை கொள்வனவு செய்வோர்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விலைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, உந்துருளிகளுக்கு 2,500 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் சகல எரிபொருள் நிலையங்களிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும்.

அதேநேரம், மகிழுந்து, சிற்றுர்ந்து ஆகியனவற்றுக்கு 10,000 ரூபாவுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படும்.உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த எரிபொருள் கட்டுப்பாடு விலைகள் விதிக்கப்பட்டுள்ளது. 

பேருந்துகள் மற்றும் ஏனைய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லை.

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த எரிபொருள் கட்டுப்பாடு விலைகள் விதிக்கப்பட்டுள்ளது.