ஜெயலலிதாவாக நடிக்கிறாரா திரிஷா?!.

15.10.2026 08:02:01

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவான ‘தேசிய தலைவர்’ என்கிற படத்தில் முத்துராமலிங்கத் தேவர் வேடத்தில் நடித்தவர் ஜெ.எம்.பஷீர்.
அடுத்து எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்’ படத்தில் ஜெ.எம்.பஷீர் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க உள்ளார்..

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஜே.எம்.பஷீர் ‘புரட்சித்தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷாவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அவர் என் மகளின் நெருங்கிய தோழி. திரிஷா ஜெயலலிதா வேடத்தில் நடித்தால் படம் வேற லெவலில் இருக்கும்..

எனது மகள் திரிஷாவுடன் இணைந்து வேறொரு படத்தில் நடித்து வருகிறார்’ என அவர் கூறியிருக்கிறார்.  ஏற்கனவே திரிசா எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார் என பரவலாக பேசப்படும் நிலையில் அவர் ஜெயலலிதா வேடத்தில் நடித்தால் அது பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.