பக்ரீத் பண்டிகை - வியாபாரிகள் மகிழ்ச்சி
மாடுகளை வாங்குவதற்காக கேரள வியாபரிகள் குவிந்திருந்தனர். பால் மாடுகள், வளர்ப்பு இளம் கன்றுகள், காளை கன்றுகள் ஆகியவையும் அதிகமாக விவசாயிகள் வாங்கி சென்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெருமாள் கோவில் மாட்டுச்சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற மிகப்பெரிய மாட்டு சந்தையாகும். நாளை மறுநாள் (10-ம் தேதி) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், மாட்டு சந்தைக்கு, தமிழகம் முழுக்க இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் இறைச்சிக்கான வெட்டு மாடுகள், காளைகள், கறவை மாடுகள், நாட்டு மாடுகள், எருமைகள் மற்றும் வளர்ப்பு கன்றுகள் என சுமார் 3,500 கால்நடைகள் விற்பனை கொண்டு வரப்பட்டது.
மாடுகளை வாங்குவதற்காக கேரள வியாபரிகள் குவிந்திருந்தனர். பக்ரீத் பண்டிகையின்போது இஸ்லாமியர்கள் மக்களுக்கு விருந்து வைப்பது வழக்கம். இதற்காக இறைச்சி மாடுகளை அதிகமாக வாங்கி சென்றனர். மேலும், கேரளாவை சேர்ந்த வியாபரிகள், வெட்டு மாடுகளை வாங்கி, உடனடியாக லாரிகளில் ஏற்றி கேரளாவிற்கு அனுப்பி வைத்தனர். பால் மாடுகள், வளர்ப்பு இளம் கன்றுகள், காளை கன்றுகள் ஆகியவையும் அதிகமாக விவசாயிகள் வாங்கி சென்றனர்.
இந்த சந்தையில் வழக்கமாக வாரம் தோறும் சுமார் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி 7 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.