ஜனவரி முதல் நாட்டில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும்

26.12.2021 10:02:38

ஜனவரி மாதம் முதல் நாட்டில் உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படுமெனத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன மக்கள் தங்களுடைய வீட்டுத் தோட்டங்களில் ஏதாவது மரக்கறிக்களை பயிரிடவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

மேலும் மிளகாய், கத்திரிச்செடி மற்றும் நிவித்தி போன்ற செடிகளை உடனடியாக வீட்டுத் தோட்டங்களில் பயிரிடுமாறும் அவா் அறிவுறுத்தியுள்ளார்.