மூக்குத்தி அம்மன் 2 புதிய புரமோ வீடியோ வெளியீடு.
22.10.2026 13:55:27
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. ஏற்கனவே முதல் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த நிலையில், இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கியிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. ஆனால் விஜய் டிவி, ஜீ தொலைக்காட்சியில் வருவது போல கிராபிக்ஸ் இருக்கிறது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். எனவே, மீண்டும் கிராபிக்ஸ் பணிகளை படக்குழு மெருகேற்றியது.
இந்நிலையில்தான் World of Mahasakthi என்கிற பெயரில் புதிய புரமோ வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதோடு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த புரமோ வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.